Pages

Thursday, 26 May 2011

ரிஷிவந்தியம் தொகுதியில் குறைகேட்பில் குழப்பம்-கலெக்டர் கோபம்-மக்கள் ஆத்திரம்

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் தொகுதியான ரிஷிவந்தியத்தில் மக்கள் குறை கேட்பு முகாமின்போது பொதுமக்கள் அவசரப்பட்டு ஆத்திரப்பட்டதால், கலெக்டரும் ஆவேசப்பட்டு கிளம்பிப் போய் விட்டார்.

ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட கோல்பாறை என்ற இடத்தில் ஆட்சித் தலைவர் பழனிச்சாமி தலைமையில் மனு நீதி நாள் முகாம் நடந்தது. கலெக்டர் நேரில் வந்து புகார் மனுக்களைப் பெற்றுக் கொண்டிருந்தார்.

அப்போது வருவாய்த்துறை அலுவலர் ஒருவர் கலெக்டரை அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்றார். இதையடுத்து கலெக்டரும் உள்ளே போனார். இந்த சமயத்தில் புகார் கொடுக்க வந்திருந்த மக்கள் கூட்டத்தில் நின்றிருந்த ஒருவர் கலெக்டர் வாங்கி வைத்திருந்த மனுக்களை கிழித்து எறிந்தார்.

மனுக்களை வாங்காமல் கலெக்டர் உள்ளே போய் விட்டாரே என்று பொதுமக்களும் ஆத்திரமடைந்தனர். சிறிது நேரத்தில் கலெக்டர் வெளியே வந்தார். அப்போது மனுக்கள் கிழிக்கப்பட்டிருப்பதைப் பார்த்து கோபமாகிய அவர், உங்கள் குறைகளைத் தீர்க்கத்தானே மனுக்களை வாங்கினேன். அதைப் போய் கிழித்துப் போட்டிருக்கிறீர்களே என்று கோபத்துடன் கூறி விட்டு அங்கிருந்து கிளம்பிப் போய் விட்டார்.

அவருடன் தாசில்தார் உள்ளிட்டவர்களும் கிளம்பிச் செல்லவே மக்கள் மேலும் கோபமடைந்து மிச்சம் மீதம் இருந்த மனுக்களையும் கீழே போட்டு தீவைத்துக் கொளுத்தி விட்டுக் கலைந்து சென்றனர்.

ஏமனில் உள்நாட்டு கலவரம் வெடித்தது தமிழக நர்சுகள் 1000 பேர் தவிப்பு








நெல்லை : ஏமனில் அதிபருக்கு எதிராக உள்நாட்டு போர் வெடித்துள்ளது. அதிபரின் ஆதரவாளர்களுக்கும் பழங்குடியினருக்கும் ஏற்பட்டுள்ள இந்த மோதலால் அங்கு பணியாற்றி வரும் தமிழகம், கேரளாவை சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான நர்சுகள் பரிதவிக்கின்றனர். ராணுவ மருத்துவமனையில் உள்ள அவர்கள், குண்டு தாக்குதலுக்கு பயந்து 3 நாட்களாக இருட்டறையில் பதுங்கி, பசி பட்டினியால் வாடி வருகின்றனர்.

வளைகுடா நாடுகளில் ஒன்றான ஏமன் நாட்டில் தலைநகர் சானா அருகே ராணுவ வீரர்களுக்கு சிகிச்சையளிக்கும் மிலிட்டரி மருத்துவமனை உள்ளது. தமிழகத்தின் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் இங்கு நர்சாக பணியாற்றி வருகின்றனர். தமிழகம், கேரளாவை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட நர்சுகள் உள்ளனர்.

அந்நாட்டில் அதிபர் அலிஅப்துல்லா சலேவை பதவி விலகக் கோரி எதிர்க்கட்சி தலைவரான ஷேக்சாதிக் அல்அமரின் ஆதரவாளர்களான பழங்குடியினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தலைநகர் சனாவில் கடந்த சில நாட்களாக அதிபரின் ஆதரவாளர்களுக்கும், பழங்குடியினருக்கும் இடையே பயங்கர கலவரம் வெடித்துள்ளது. கலவரத்தில் இதுவரை 50&க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் ஏமனின் முக்கிய எதிர்க்கட்சியான ஹாஷித் என்ற பழங்குடியின கூட்டுக்குழுவின் தலைவர் அமர் வீடு மீது அதிபரின் ஆதரவாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதில் பலர் பலியாயினர். இதையடுத்து தேசிய செய்தி ஒலிபரப்பு நிறுவனமான சபா, தேசிய விமான நிலைய அலுவலகமான ஏமனியா ஆகியவற்றின் கட்டிடங்களை பழங்குடியினர் நேற்று கைப்பற்றினர். உள்துறை அமைச்சக கட்டிடத்துக்கும் தீ வைக்க முயன்றனர்.

இதைத் தொடர்ந்து அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் பணியாற்றிவரும் இந்திய நர்சுகளை குறிவைத்து தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர். நர்சுகள் தங்கியுள்ள விடுதியில் சில தினங்களுக்கு முன்பு அதிபருக்கு எதிரானவர்கள் ‘டைம்பார்ம்’ வைத்தனர். இதை ராணுவத்தினர் கண்டுபிடித்து அகற்றியதால் நர்சுகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதனால் ஆத்திரமடைந்த பழங்குடியினர் கடந்த 3 நாட்களாக நர்சுகள் தங்கியுள்ள விடுதியை நோக்கி கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்ட வண்ணமும் உள்ளனர். ராணுவத்தினரும் நர்சுகளுக்கு பாதுகாப்பாக சண்டையிட்டு வருகின்றனர். தொடர்ந்து துப்பாக்கி சத்தம் கேட்டுக்கொண்டே இருப்பதால் நர்சுகள் தூக்கமின்றி தவித்து வருகின்றனர். கடந்த 3 நாட்களாக அவர்கள் தங்கியுள்ள அறைகளுக்கு மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. உணவு மற்றும் குடிநீர் இன்றியும் தவித்து வருகின்றனர். உயிருக்கு பயந்து அனைவரும் விடுதியில் உள்ள கட்டிலுக்கு அடியில் பதுங்கியுள்ளனர்.

ஒரு பக்கம் தாக்குதல், மற்றொரு பக்கம் உணவு, தண்ணீர் இன்றி நர்சுகள் தவித்து வருகின்றனர். பலரது செல்போன் சார்ஜ் இல்லாமல் சுவிட்ச் ஆப் ஆகி வருகிறது. சிலர் செல்போன் மூலம் தமிழகத்தில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து தங்களை காப்பாற்றும்படி கதறி அழுகின்றனர். எதிர்ப்பாளர்களின் தாக்கு தலுக்கு உள்ளாகி இருக்கும் நர்சுகளை மீட்கும் நடவடிக்கையில் அந்நாட்டு இந்திய தூதரகம் இறங்கி உள்ளது. போரில் காயம்படும் வீரர்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக நர்சுகளை அவர்களது சொந்த நாட்டுக்கு அனுப்ப ஏமன் அரசும் ராணுவமும் மறுத்து வருகிறது.

இதற்கிடையே, ஏமனில் சிக்கியுள்ள நர்சுகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்றிரவு நெல்லை எம்.பி. ராமசுப்புவை சந்தித்து முறையிட்டனர். அவர் கூறும்போது, ‘‘ஏமன் நாட்டில் நடக்கும் உள்நாட்டு போரால் எதிர்ப்பாளர்களின் தாக்குதலுக்கு மத்தியில் சிக்கியுள்ள நர்சுகளின் உறவினர்கள் என்னிடம் முறையிட்டனர். உடனடியாக டெல்லியில் உள்ள வெளிநாட்டு தூதரகத்துக்கு தகவல் தெரிவித்தேன். ஜப்பானில் சிக்கி தவித்த 40 தமிழர்களை காப்பாற்றியதுபோல், இவர்களையும் ஓரிரு நாட்களில் மீட்க மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

செல்போனை வைத்து தாக்கும் கலவரக்காரர்கள்

மருத்துவமனை அருகே இருட்டறையில் தங்க வைக்கப்பட்டுள்ள நர்சுகள், தங்களை காப்பாற்றும்படி பெற்றோருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்து வருகின்றனர். இந்த செல்போனை வைத்து அவர்களின் இருப்பிடத்தை தெரிந்து கொண்ட கலவரக்காரர்கள், இன்று அதிகாலை முதல் அங்கு தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

ராணுவத்தினரும் விடாமல் தொடர்ந்து எதிர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த 3 நாட்களாக துப்பாக்கி சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருப்பதால் நர்சுகள் அச்சத்தில் உறைந்துள்ளனர். செல்போன் மூலம் இருப்பிடத்தை கலவரக்காரர்கள் தெரிந்து கொள்வதால் எல்லாருடைய செல்போனையும் சுவிட்ச் ஆப் செய்ய அந்நாட்டு ராணுவம் உத்தரவிட்டுள்ளது.

ராஜிவைக் கொல்ல திட்டம் தீட்டியது பிரபாகரன்தான்: கேபி ஒப்புதல்












புதுதில்லி, மே.24: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியை கொலைசெய்ய விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன்தான் திட்டம் தீட்டினார் என கேபி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்தார்.

ராஜிவ் காந்தியின் படுகொலைக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் பத்மநாதன் குறிப்பிட்டார்.

இதுகுறித்து சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி:


கேள்வி: ராஜிவ்காந்தியை கொல்ல பிரபாகரன் திட்டம் தீட்டினாரா?


கேபி: அது பிரபாகரனால் நன்கு திட்டமிட்டு செய்யப்பட்டது. இது அனைவருக்கும் தெரிந்த உண்மை. இந்திய மக்களுக்கும், குறிப்பாக காந்தி குடும்பத்தினருக்கும் நான் கூறுவது என்னவென்றால் பிரபாகரன் தவறுக்காக நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். தயவுசெய்து எங்களை மன்னித்துவிடுங்கள். எங்கள் மக்கள் இப்போது சிக்கலில் உள்ளனர். மனிதர்களாக வாழ எங்களுக்கு உதவி செய்யுங்கள்.


கேள்வி: அரசியல்வாதிகளும், அரசியல்கட்சிகளும் தமிழ் மக்களை வன்முறைப் பாதைக்குள் தள்ளினார்களா?


கேபி: திராவிட நாடு வேண்டும் என பெரியார் விரும்பினார். அதாவது வடக்கில் இருந்து தமிழகம், கேரளா, ஆந்திராவை பிரிக்க வேண்டும் என்றார். இந்த கொள்கையுடன் அவர் அமைப்பைத் தொடங்கினார். அதில் இருந்து அண்ணாதுரையும், கருணாநிதியும் வந்தனர். திராவிட நாடு கோரிக்கை தோல்வி அடைந்தது. அந்த கொள்கையை பிரபாகரனுக்கு அவர்கள் தெரிவித்தனர். பிராமணர்களுக்கு எதிரான கொள்கைகளால் பிரபாகரனை அவர்கள் கவர்ந்தனர். அந்த கொள்கைகளினால்தான் பிரபாகரன் அனைத்து தவறுகளையும்(ராஜிவ்காந்தி படுகொலை உள்ளிட்ட) செய்தார்.



கேள்வி: திமுக எப்படி விடுதலைப்புலிகளை ஆதரித்தது?


கேபி: வைகோ முன்பு திமுகவில் இருந்தார். திமுக எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் சிலர் எங்களுடன் நெருக்கமாக இருந்தனர். கருணாநிதி ஒரு மூத்த அரசியல்வாதி. ஆனால் அவரும் விடுதலைப்புலிகளை அவ்வப்போது பயன்படுத்திக்கொண்டார்.

சட்டப்பேரவைத் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

சென்னை, மே 25: சட்டப்பேரவைத் திமுக தலைவராக மு.க. ஸ்டாலினும், துணைத் தலைவராக துரைமுருகனும், கொறடாவாக அர.சக்கரபாணியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான அறிவிப்பை புதன்கிழமை நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்துக்குப் பிறகு திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டார்.
தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலிமாறன் கூட்ட அரங்கில் புதன்
கிழமை நடைபெற்றது.
காலை 11 மணி முதல் 12.15 மணி வரை நடைபெற்ற கூட்டத்துக்கு கருணாநிதி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் க.அன்பழகன் முன்னிலை வகித்தார்.
பொருளாளரும், கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான மு.க.ஸ்டாலின் உள்பட திமுகவின் 23 எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்றார்கள்.
திமுக ஆட்சியின்போது அரசு கொறடாவாக இருந்த அர.சக்கரபாணி இப்போது திமுக கொறடாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
பதவியேற்பு: கருணாநிதியும், துரைமுருகனும் பேரவையில் இன்னும் எம்.எல்.ஏ.வாக பதவியேற்காமல் உள்ளார்கள். இது குறித்து கருணாநிதியிடம் கேட்டபோது, பேரவைத் தலைவர் குறிப்பிடும் நாளில் பதவியேற்பேன் என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
திமுகவின் அணுகுமுறை: பேரவையில் திமுகவின் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. முதல் பட்ஜெட் தொடரில் ஆளுங்கட்சியினரோடு மோதல் போக்கு மேற்கொள்ளாமல் புள்ளிவிவரங்களோடு விவாதங்களில் ஈடுபட வேண்டும் என்று பேரவை உறுப்பினர்களுக்கு கருணாநிதி அறிவுரை கூறியுள்ளார்.
பேரவையின் திமுக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கும் கருணாநிதி பல்வேறு அறிவுரைகள் வழங்கியதாகச் சொல்லப்படுகிறது. பேரவையில் திமுகவுக்கு பிரதான
எதிர்க்கட்சி அந்தஸ்து இல்லாவிட்டாலும் அந்த இடத்தில் இருப்பதாக நினைத்துச் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்றும் கூறினாராம்.

லோ‌க்பா‌ல் மசோதா வரைவு குழு‌வி‌ல் பெ‌ண்களை சே‌ர்‌க்க கோ‌ரி

லோ‌க்பா‌ல் மசோதா வரைவு குழு‌வி‌ல் பெ‌ண்களை சே‌ர்‌க்க கோ‌ரி செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் பொது நல வழ‌க்கு தா‌க்க‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

சென்னையசேர்ந்வழ‌க்க‌றிஞ‌ர் பழனிமுத்து எ‌ன்பவ‌ர் தா‌க்க‌ல் செ‌ய்து‌ள்ள, மத்திஅரசலோக்பாலசட்மசோதாவகொண்டநடவடிக்கஎடுத்தவருகிறது. இதற்காமத்திி‌தி அமை‌ச்ச‌ர் தலைமையிலலோக்பாலசட்மசோதவரைவகூட்டுக்குழுவஅமைத்துள்ளது. இதிலபெண்கள், எஸ்.ி.-எஸ்.ி. வகுப்பினருக்கபிரதிநிதித்துவமவழங்வேண்டும்.


பிராந்திஅளவிலுமபிரதிநிதிகளஇடமபெவேண்டும். நமநாட்டிலஎஸ்.ி., எஸ்.ி. பிரிவினர் 4இலஒரசதவீதமஉள்ளனர். பெண்கள் 50 சதவீதமபேரஉள்ளனர். லோக்பாலசட்மசோதவரைவகமிட்டி 30ஆ‌ம் தேதி கூடுகிறது.

பெண்கள், எஸ்.ி., எஸ்.ி. வகுப்பினருக்கபிரதிநிதித்துவமஅளிக்காமலஇக்கமிட்டி கூட்டமநடைபெறக்கூடாது. இவ்வழக்கமுடியுமவரலோக்பாலசட்மசோதவரைவகூட்டகுழகூடுவதற்கதடவிதிக்வேண்டும், கடந்த 24ஆ‌‌ம் தேதி கூட்டகுழுவதிருத்தி அமைக்கும்படி மத்திஅரசுக்கமனகொடுத்தேன். அந்மனமீதஉரிஉத்தரவபிறப்பிக்குமபடி மத்திஅரசுக்கஉத்தரவிவேண்டும் எ‌ன்று மனு‌வி‌ல் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இ‌ந்த மனநீதிபதிகளராஜேஸ்வரன், வாசுகி ஆகியோரமுன்னிலையிலஇன்றபிற்பகலவிசாரணைக்கவருகிறத

மு.க.அழகிரி மீதான வழக்கை விசாரிக்க மேலும் தடை நீட்டிப்பு

த‌மிழக சட்ட‌ப்பேரவை தேர்தலின் போது அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூ‌றிய மத்திஅமை‌ச்ச‌ரமு.க.அழகிரி ‌மீதான வழ‌க்கை காவ‌ல்துறை‌யின‌ர் ‌விசா‌ரி‌க்க தடை மேலு‌ம் ‌‌நீடி‌த்து மதுரை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற ‌கிளை உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக மத்திய அமை‌ச்ச‌ர் மு.க.அழகிரி, துணை மேயர் பி.எம்.மன்னன், மேலூர் ஒன்றிய தி.மு.க செயலர் ரகுபதி, ஒத்தப்பட்டி திருஞானம் ஆகியோர் மீது கீழவளவு காவ‌ல்துறை‌யின‌ர் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கை காவ‌ல்துறை‌யின‌ர் விசாரிக்க தடை விதித்து மதுரை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ ‌கிளை உத்தரவிட்டது. இந்த நிலையில் நேற்று அந்த வழக்கு நீதிபதி பி.ராஜேந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அ‌ப்போது மனுவை விசாரித்த நீதிபதி ராஜே‌ந்‌திர‌ன், ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டித்து உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 1ஆ‌ம் தேதிக்கு தள்ளிவை‌த்தா‌ர்.

ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு

பெங்களூர், மே.26: தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை மே 30-ம் தேதிக்கு சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
தங்கள் சார்பில் வாதாட மூத்த வழக்கறிஞர் இல்லாததால் வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பில் கோரப்பட்டதையடுத்து நீதிபதி மல்லிகார்ஜூனைய்யா விசாரணையை ஒத்திவைத்தார்.
முன்னதாக இந்த வழக்கில் ஒரு சாட்சியை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவுக்கு அரசுத் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் தமிழக அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது இடத்துக்கு புதிய வழக்கறிஞரை ஜெயலலிதா இதுவரை நியமிக்கவில்லை.

மரியம் பிச்சைக்கு இரங்கல் தெரிவித்து திமுகவில் தீர்மானம்!!

திருச்சி: அமைச்சர் மரியம் பிச்சையின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து திருச்சி மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். மேலும் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிமுகவைச் சேர்ந்த அமைச்சரின் மரணம் தொடர்பாக திமுக செயற்குழுவில் தீர்மானம் போட்டது ஏன் என்று திருச்சி பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது, வியப்பாக பார்க்கப்படுகிறது.

திருச்சி மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. மாவட்ட தி.மு.க செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு முன்னிலை வகித்து கூட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்தக் கூட்டத்தில் மரியம் பிச்சை தொடர்பாக தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன.

தீர்மான விவரங்கள்:

- நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வது.

- கார் மீது லாரி மோதி மரணம் அடைந்த மரியம்பிச்சை மறைவுக்கு தலைவர் கருணாநிதி நேரில் சென்று மாவட்ட கழகம் சார்பில் அஞ்சலி செலுத்திட ஆணையிட்ட நிலையில் சில தீயசக்திகளின் தவறான பிரசாரத்தினால் ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டதால் அஞ்சலி செலுத்திட இயலவில்லை என்றாலும் அவர் மாற்று கட்சியில் இருந்தாலும் கட்சி மாச்சரியம் இல்லாமல் இன, மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு அனைவரிடமும் அன்பு பாராட்டி செயல்பட்டதை மனதில் கொண்டு அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு திருச்சி மாவட்ட தி.மு.க சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வது.

- மரியம் பிச்சை மரணம் அடைந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க இந்த அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

- மரியம் பிச்சை மறைவின்போது திருச்சி மாநகரில் உள்ள தி.மு.க. கொடி கம்பங்கள் வெட்டப்பட்டு, கல்வெட்டுக்கள் உடைக்கப்பட்ட போது சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல் துறை கைகட்டி வேடிக்கை பார்த்ததை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் கே.என். நேரு பேசுகையில்,

அமைச்சர் மரியம்பிச்சை மரணம் அடைந்ததை தி.மு.கவுடன் தொடர்புபடுத்தி சம்பந்தமே இல்லாமல் பேசி வருகிறார்கள். இப்படி பேசுவதாலும், எந்த சக்தியாலும் தி.மு.கவை அழிக்க முடியாது. தில்லைநகரில் நேருவுக்கு 63 வீடுகள், 7 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து சேர்த்து விட்டார் என்றெல்லாம் பொய் பிரசாரம் செய்தார்கள். இப்படி பொய் பிரசாரம் செய்ததால் தான் கழகம் தோல்வியை தழுவியது என்றார்.

மெட்ரிக் பள்ளிகளை ஜூன் 15-க்கு முன் திறந்தால் கடும் நடவடிக்கை! - தமிழக அரசு

சென்னை: தமிழக அரசின் உத்தரவை மீறி, வரும் ஜூன் 15-க்கு முன் தனியார் பள்ளிகளைத் திறந்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

மாநில அரசு பாடத் திட்டம், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஒரியண்டல் உள்ளிட்ட கல்வி முறைகளை ஒருங்கிணைத்து சமச்சீர் கல்வி முறையை கடந்த ஆண்டு அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதில் முதல் கட்டமாக 1-ம் வகுப்பு முதல் 6-ம் வகுப்புக்கு வரை மட்டும் சமச்சீர் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. வரும் கல்வி ஆண்டான 2011-2012-ல் எஸ்.எஸ்.எல்.சி.வரை உள்ள அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனவே கோடை விடுமுறை முடிந்து 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக இருந்தது.

புதிய அமைச்சரவை பொறுப்பேற்ற பின்னர் சமச்சீர் கல்வி தரமானதாக இல்லை என்றும் எனவே இந்த ஆண்டு பழைய பாட திட்டங்களை தொடரலாம் என்றும் அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது.

பாடப் புத்தங்களைத் தயாரிக்க கால அவகாசம் வேண்டும் என்பதால் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகளை ஜூன் 15-ந்தேதி திறக்கலாம் என்றும் அரசு அறிவித்தது.

இந்த நிலையில் ஒரு சில மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் தங்களுக்கு எந்தவித உத்தரவும் வரவில்லை என்று கூறி ஜூன் 1-ம் தேதி பள்ளிகளைத் திறப்பதற்கான ஏற்பாடுகளில் இறங்கி உள்ளன. இதையறிந்த மெட்ரிக் ஆய்வாளர், முதன்மை கல்வி அலுவலர்கள் அனைத்து மெட்ரிக்குலேஷன் மற்றும் சுயநிதி பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.

அதில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 15-ந்தேதிதான் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

அரசு அறிவிப்புக்கு முன்பு விதி மீறி திறக்கப்படும் பள்ளிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசின் சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது

சமச்சீர் கல்வி : தமிழக அரசுக்கு நோட்டீஸ்

சென்னை : சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளதை எதிர்த்து பொது நல வழக்கு தொடரப்பட்டது. மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் சமச்சீர் கல்வி திட்டத்தை செயல்படுத்த முந்தைய அரசு ரூ.200 கோடி ரூபாய் செலவழித்தது. இதனை வீணடிக்கும் வகையில் தற்போதைய அரசு சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது என்றார். மாணவர்கள் எதிர்காலம் பாழாகும் வகையில் இந்த அரசு ஆணை அமைந்துள்ளது என்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் சமச்சீர் கல்வி விவகாரத்தில் தமிழக அரசு ஜூன் 8ம் தேதிக்குள் விளக்கமளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது

குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது விமானம் : 10 பேர் பரிதாப பலி!









புதுடெல்லி : பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவனை ஏற்றிக் கொண்டு தலைநகர் டெல்லி சென்ற விமானம் பரிதாபாத் அருகே குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதில் டாக்டர்கள் உள்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த 4 பேர் காயமடைந்தனர். பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர் ராகுல்ராஜ் (17). பிளஸ் 2 படித்து வந்தான். மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட ராகுல், அங்குள்ள ஜெகதீஷ் நினைவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான்.

அவன் கோமா நிலைக்கு சென்றதால் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டான். மேல் சிகிச்சைக்காக மாணவனை டெல்லி அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதற்காக டெல்லியில் உள்ள 'ஏர் சார்ட்டர்டு சர்வீசஸ் இந்தியா' என்ற நிறுவனத்தின் குட்டி ஆம்புலன்ஸ் விமானம் ஒன்று வாடகைக்கு நேற்றிரவு வரவழைக்கப்பட்டது. அந்த பிசி-12 ரக குட்டி விமானத்தில் ஒரேயொரு இன்ஜின் மட்டுமே இருக்கும்.

விமானத்தில் இரண்டு டாக்டர்களும் பாட்னா வந்தனர். ராகுலுடன் அவனது உறவினர் ரத்தேஷ்குமார், டாக்டர்கள் ராஜேஷ், அர்ஷாத், பைலட் ஹர்பிரீத், துணை பைலட் மன்பிரீத் கட்டாரியா, ஆண் நர்ஸ் சிரில் ஆகிய 7 பேருடன் விமானம் பாட்னாவில் இருந்து புறப்பட்டு சென்றது. டெல்லி அருகே பரிதாபாத்தில் நேற்று இரவு 10.30 மணியளவில் 11 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்தது.

அப்போது தரையிறங்க தயாராகுமாறு பைலட்டுக்கு விமான கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. விமானத்தை கீழே இறக்க முயன்றபோது, 8 ஆயிரம் அடி உயரத்தில் பலத்த காற்று வீசியது. இதில் நிலை குலைந்த விமானம், திடீரென கட்டுப்பாட்டை இழந்து பரிதாபாத்தின் பர்வதியா காலனி குடியிருப்பு பகுதியில் உள்ள இரண்டடுக்கு வீட்டின் மீது மோதி நொறுங்கியது. இரு துண்டுகளாக உடைந்த விமானத்தின் பின் பகுதி வீட்டின் மாடியிலும், முன் பகுதி அருகில் உள்ள குறுகலான தெருவிலும் விழுந்து தீப்பிடித்து எரிந்தது.

விமானத்தில் பயணம் செய்த 7 பேரும், விமானம் மோதிய வீட்டில் இருந்த 3 பெண்களும் இந்த விபத்தில் பலியாயினர். விமானம் மோதிய வீட்டில் மொத்தம் 10 பேர் இருந்துள்ளனர். இதில் வீட்டு உரிமையாளரின் மனைவி, மகள், மருமகள் ஆகிய 3 பேரும் பலியாயினர். 4 பேர் காயம் அடைந்தனர். வீட்டு உரிமையாளர் மற்றும் அவரது மகன் காயமின்றி தப்பினர்.
விமானம் தீப்பிடித்ததில் அங்கிருந்த சில வீடுகளுக்கும் தீ பரவியது. இதனால் மக்கள் அலறியடித்து வீட்டை விட்டு வெளியேறினர். தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்களும் மீட்புப் படையினரும் விரைந்து வந்தனர். அங்கு பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. விபத்துக்குள்ளான விமானம் 2005ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து விமான கட்டுப்பாட்டு மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், " ஒற்றை இன்ஜின் விமானத்தை பலத்த காற்று வீசும்போது இயக்குவது சிக்கலானது. விமானத்தின் வால் பகுதியை நோக்கி காற்று வீசினால், விமானத்தை நிலைகுலைய செய்து தலைகீழாக கவிழ்த்துவிடும்" என்றார்.