லோக்பால் மசோதா வரைவு குழுவில் பெண்களை சேர்க்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் பழனிமுத்து என்பவர் தாக்கல் செய்துள்ள, மத்திய அரசு லோக்பால் சட்ட மசோதாவை கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக மத்திய நிதி அமைச்சர் தலைமையில் லோக்பால் சட்ட மசோதா வரைவு கூட்டுக்குழுவை அமைத்துள்ளது. இதில் பெண்கள், எஸ்.சி.-எஸ்.டி. வகுப்பினருக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்.
பிராந்திய அளவிலும் பிரதிநிதிகள் இடம் பெற வேண்டும். நம் நாட்டில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 4இல் ஒரு சதவீதம் உள்ளனர். பெண்கள் 50 சதவீதம் பேர் உள்ளனர். லோக்பால் சட்ட மசோதா வரைவு கமிட்டி 30ஆம் தேதி கூடுகிறது.
பெண்கள், எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு பிரதிநிதித்துவம் அளிக்காமல் இக்கமிட்டி கூட்டம் நடைபெறக்கூடாது. இவ்வழக்கு முடியும் வரை லோக்பால் சட்ட மசோதா வரைவு கூட்டு குழு கூடுவதற்கு தடை விதிக்க வேண்டும், கடந்த 24ஆம் தேதி கூட்டு குழுவை திருத்தி அமைக்கும்படி மத்திய அரசுக்கு மனு கொடுத்தேன். அந்த மனு மீது உரிய உத்தரவை பிறப்பிக்கும் படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் ராஜேஸ்வரன், வாசுகி ஆகியோர் முன்னிலையில் இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகிறது

No comments:
Post a Comment